மேர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தும் மனித மூளையின் கட்டுப்பாட்டால் இயங்கும் கார்

#luxury vehicle
Prasu
3 years ago
மேர்சிடிஸ் பென்ஸ் அறிமுகப்படுத்தும் மனித மூளையின் கட்டுப்பாட்டால் இயங்கும் கார்

ஓட்டுநருக்குப் பதிலாக எந்திரங்களைக் கொண்டு இயங்கும் கார்கள் புரோட்டோ டைப் கட்டத்தில் இருக்கின்றன. ஒரு கார் தானாகவே இயங்கும் வசதியைக் கூட டெஸ்லா நிறுவனம் மெய்ப்பித்திருக்கிறது. ஆனாலும் அதன் துல்லியத்தன்மை இன்னமும் சந்தேகம் கலந்த ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்த நிலையில், தற்போது டெஸ்லாவைத் தாண்டிய ஒரு பாய்ச்சலாக, ஒரு மனிதனின் மூளையுடன் இணைந்து கட்டளைகளைப் பெற்று ஓடக்கூடிய காரை வெளியிட்டு அசத்தியுள்ளது பென்ஸ் நிறுவனம்.

ஜெர்மனியில் நடைபெற்ற ஐஏஏ மொபிலிட்டி 2021 விழாவில் இந்த அதிநவீன தயாரிப்பான மெர்சிடீஸ்பென்ஸின் விஷன் ஏவிடிஆர் (Vision AVTR) கான்செப்ட் கார் பார்வைக்கு வைக்கப்பட்டது.
 
மெர்சிடீஸ் பென்ஸின் விஷன் ஏவிடிஆர் (Vision AVTR)
'அவதார்' என்னும் ஆங்கில திரைப்படத்தில் அவதார்கள் அவர்களின் வாகனமான விலங்குகளுடன் தங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இணைத்துக்கொண்டு அவற்றுடன் பயணிக்கும் காட்சியை முன்மாதிரியாகக் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரைன் கம்பியூட்டர் இன்டர்ஃபேஸ் (BCI-Brain Computer Interface) என்னும் தொழில்நுட்பத்தின் மூலம் நம் தலையுடன் மின்முனைகள் இணைக்கப்பட்டு அதன் வழியாக மூளையின் அலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கணினிக்கு சிக்னலாக அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் காரில் ஓடும் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது, மாற்றுவது முதலான வேலைகளை கூட எந்த அசைவும் இன்றி செய்ய முடியும்.

விஷன் ஏவிடிஆரின் வடிவமைப்பும் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பமும் கார் தொழில்நுட்ப வரலாற்றின் புரட்சிகரமான மைல்கல்கள். ஸ்டியரிங்க் இல்லாத கார் அதிசயம்தானே? மேலும் பயணிப்பவர்களின் இதயத்துடிப்பைக் கண்டறியும் வசதியும், சூரிய மின்சக்தியை உபயோகிக்கும் வசதியும் பொருத்தப்பட்டுள்ளன.
 
மூளையால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் வாகனத்தை இயக்க அதிக கவன செறிவு தேவை என்பதால் அதிக தூரம் ஓட்டுவதற்கு இந்தத் தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்காது. தற்போது பொதுப் பயன்பாட்டில் இல்லாத விஷன் ஏவிடிஆர் வருங்காலத்தில் பயன்பாட்டுக்கு வரலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் 2021ல் பிசிஐ தொழில்நுட்பத்தின் மூலம் மனித மூளையைப் படிக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது பென்ஸ் நிறுவனம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!