பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு விருந்தளித்த பாலிவுட் ஜோடி

Keerthi
3 years ago
பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு விருந்தளித்த பாலிவுட் ஜோடி

டோக்யோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பாலிவுட் ஜோடியான ரன்வீர்சிங்-தீபிகா படுகோனோ மும்பை நட்சத்திர சொகுசு ஓட்டலில் சமீபத்தில் விருந்தளித்தனர்.

அந்த புகைப்படங்களை ரன்வீர்சிங்கும், பி.வி.சிந்துவும் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தெலுங்கு ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, பி.வி.சிந்து மற்றும் அவரது குடும்பத்தினரை தனது வீட்டிற்கு நேரில் அழைத்து விருந்து அளித்து பாராட்டிய நிலையில், அடுத்ததாக பாலிவுட் ஜோடியான, ரன்வீர் சிங்-தீபிகா படுகோனே தம்பதியினர் விருந்தளித்து பாராட்டி உள்ளனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியின் போது தீபிகா படுகோனோ , அவரது கணவர் ரன்வீர் சிங், ஒலிம்பிக் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் அணிந்திருந்த உடைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!