ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய சாதனங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் நிகழ்வு இன்று ஆப்பிள் டிவி பிளஸ் அறிமுகத்துடன் துவங்கியது. புதிய டிவி தொடர்களுடன், திரைப்படங்களுடன் ஆப்பிள் டிவி பிளஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக டிம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஐபேட் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் சாதனம் 40% மேம்படுத்தலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அதன் வரிசையில் ஆப்பிள் ஐபேட் மினி அறிமுகம் செய்யப்பட்டது. கை அளவு டிசைனில் 4 புதிய வண்ணங்களில் ஐபேட் மினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலின் அம்சங்களை 40 - 80% வரை மேம்படுத்தியுள்ளது. இது 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு பின்பக்க லென்ஸ் உடன் டச் இடி ஆதரவை ஆதரிக்கிறது. இதன் விலை $499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் பெரிய முழு டிஸ்பிளே ஆதரவுடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7 ஸ்லிம் வடிவத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவசர உதவி அம்சத்துடன், புது வாட்ச் பேஸ், முழு கீபோர்ட் போன்ற ஏராளமான புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் மிகுந்த உறுதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 33% வேகமான பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் டைப் சி சார்ஜ்ரை ஆதரிக்கிறது. இந்த முறை $399 விலையில் ஆரம்பமாகிறது.
இதனைத் தொடர்ந்து புதிய ஐபோன் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் அதிநவீன கேமரா அம்சம், அதிக சக்தி, மிரட்டலான செயல்திறன் உடன் பல விதமான புதிய மேம்படுத்தலுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 ஸ்லீக் டிஸைனுடன் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்துடன் வருகிறது. ஐபோன் 13 சாதனம் 5 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆப்பிள் A15 பயோனிக் Apple A15 Bionic (5 nm) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் 13 அதிக வேகத்தில் செயல்படுகிறது.
நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஆப்பிள் ரசிகர்களுக்கான மிக முக்கியமான நாள் இன்று. காரணம், ஒரு வழியாக ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் சாதனங்களை இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் இல் முதலாவதாக ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் ஆப்பிள் ஐபோன் 13 மினி ஆகிய மாடல்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆப்பிள் ஐபோன் 13 என்பது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடலாகும், இது ஐபோன் 13 சீரிஸ் வரிசையில் இருக்கும் பேசிக் வேரியண்ட் ஐபோன் மாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.