பில் கேட்ஸ் பற்றி யாருக்குமே தெரியா சில அரிய தகவல்கள்
கேட்ஸ் தம்பதியினர் தங்கள் பிள்ளைகளுக்கு 14 வயதாகும் வரை அலைபேசிகள் வழங்க மறுத்து விட்டனர். இன்றளவும் கேட்ஸ் வீட்டில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
1977ல் வேக வரம்பை மீறி கார் ஓட்டியதற்காக நியூ மெக்ஸிகோவில் கைது செய்யப்பட்டார்.
கேட்ஸ் தனது SAT (Scholastic Assessment Test) தேர்வில் 1600க்கு 1590 மதிப்பெண்கள் பெற்றார்.
உலகின் அனைத்து நிரலாக்க மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். ஆனால் ஆங்கிலம் தவிர பில் கேட்ஸுக்கு வேறு எந்த மொழியும் பேசத் தெரியாது.
கடந்த முப்பது வருடங்களாக உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மூன்று ஸ்தானங்களில் தொடர்ந்து இருக்கும் ஒரே ஜீவராசி.
ஆனால் கேட்ஸின் பிள்ளைகளுக்கு அவரது சொத்திலிருந்து தலா 10 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைக்கும் என்று உயில் எழுதப்பட்டிருக்கிறது. (கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு 1,13,100.00 மில்லியன் டொலர் )
லியோனார்டோ டாவின்சி எழுதிய 'கோடெக்ஸ் லீசெஸ்டர் ' கட்டுரைகளின் ஒரிஜினல் கைப்பிரதியை 30.8 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் வாங்கினார்.
செயற்கை நுண்ணறிவு ஆய்வுகளை (artificial inteligence) ஆதரிக்கிறார்; ஆனால் ஸ்டீபன் காவ்க்கிங், எலன் மாஸ்க் போல 'சூப்பர் நுண்ணறிவு' (super inteligence) ஆய்வுகளில்தான் முதலீடு செய்கிறார்.
உலக சுகாதார நிறுவனம் ஒரு வருடத்தில் உலக சுகாதாரத்துக்காக செலவிடுவதைவிட அதிகமாக பில் கேட்ஸ் பணம் செலவிடுகிறார். இதுவரை 36 பில்லியன் டொலர்.
வெறிபிடித்த வாசகர். ஆண்டுக்கு 50 புத்தகங்களைப் படிக்கிறார். வாரத்துக்கு ஒரு புத்தகம்.
மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களின் வாகன உரிம எண்களை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அவர்களின் வருகையை வேவு பார்ப்பது ஆரம்ப காலத்தில் கேட்ஸின் வழக்கம்.
கேட்ஸ் ஒரு கல்லூரி 'ட்ராப் அவுட்'. இரண்டு வருட சட்டப் படிப்புக்கு பிறகு மைக்ரோசாப்ட் நிறுவுவதற்காக 1975-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து விலகினார். 2007-ல் பல்கலைக்கழகம் ஒரு கௌரவ பட்டம் கொடுத்து ஆறுதல் அளித்தது.
2009-ல் வாரன் பபெட்-டுடன் இணைந்து "தொண்டளிப்போம்" என்ற (The Giving Pledge) அறக்கட்டளையை கேட்ஸ் நிறுவினார். அவர்களும் மற்ற பிற பில்லியனர்களும் தங்கள் வாழ்நாள் செல்வத்தில் பாதியை தொண்டுக்கு வழங்க ஒரு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இறுதியாக: அவரது பெயர் உண்மையில் பில் கேட்ஸ் அன்று, வில்லியம் ஹென்றி கேட்ஸ் III.