நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கு - 12 பேருக்கு மரண தண்டனை!

#SriLanka #Court Order #Gampaha #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
நாடாளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கு - 12 பேருக்கு மரண தண்டனை!

2022 ஆம் ஆண்டு முன்னாள் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கம்பஹா உயர் நீதிமன்ற விசாரணைக் குழுவால் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. 

நான்கு பேருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 23 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

 மே 09, 2022 அன்று நாடு தழுவிய வன்முறை சம்பவங்களின் போது நிட்டம்புவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு மத்தியில் பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது பாதுகாப்பு அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிளும் அடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

பின்னர் நாடாளுமன்ற உறுப்பினரின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பலர்   பல சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டனர். 

 அதன்படி, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4