தெமட்டகொடயில் பொலிஸார் மீது தாக்குதல்: 5 பேர் கைது

#Arrest #Police #Colombo
Prathees
4 years ago
தெமட்டகொடயில் பொலிஸார் மீது தாக்குதல்: 5 பேர் கைது

கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் இன்று (15) பிற்பகல் தெமட்டகொட காக்கிபுல்ல பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 10 கிராம் 200 மில்லிகிராம் போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதன்போது அப்பகுதியில் இருந்த மற்றொரு குழுவினர் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4