குழந்தை பிரசவித்த தாய் கொரோனவால் மரணம்

#Covid 19 #Death #SriLanka
Prasu
4 years ago
குழந்தை பிரசவித்த தாய் கொரோனவால்  மரணம்

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண், குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

செப்டெம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில்  அவர் உயிரிழந்துள்ளார் என இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4