இலங்கையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

#SriLanka #Covid 19 #Curfew
Yuga
4 years ago
இலங்கையில் ஊரடங்கு நீடிக்கப்படுமா?

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா ஒழிப்பு செயலணியின் வாராந்த மீளாய்வுக்கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை நடைபெறவுள்ளது.

இதன்போதே நாட்டின் தற்போதைய நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு, தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் கடும் சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படலாம் எனவும், மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4