யாழில் சோகம் குழந்தை பிரசவித்த மற்றுமொரு தாயும் மரணம் !

#Jaffna #Hospital #Covid 19 #Death
Yuga
4 years ago
யாழில் சோகம் குழந்தை பிரசவித்த மற்றுமொரு தாயும்  மரணம் !

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொரு தாயார் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே, போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

எனினும், அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

குறித்த கற்பிணிப் பெண், கடந்த 8ஆம் திகதி கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவருக்கு கொரோனாச் சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டு, அன்றைய தினமே அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த தாயாருக்குத் தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4