கொரோனாவுக்காக கடவுளின் உதவியை நாடிய ஒரு பெண் கோவிலுக்குள் மரணம்

#Death
Prathees
4 years ago
கொரோனாவுக்காக கடவுளின் உதவியை நாடிய ஒரு பெண் கோவிலுக்குள் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  சுகமடைய கடவுளின் உதவியை நாடிய  பெண் ஒருவர் கோவிலில் உயிரிழந்துள்ள சம்பவம்  அம்பேபுஸ்ஸ பலத்தவஇ கெபெல்லவிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதேபகுதியில் வசிக்கும் ரேணுகா தமயந்தி (53) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு குணமடைந்ததாக கூறப்படுகிறது.

குறித்த பெண் கடந்த 14 ஆம் திகதி மாலை திடீரென உடல்நலக்குறைவு காரணமாக கெபெல்லவிட்ட பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அவரது சகோதரியால் அழைத்துச் செல்லப்பட்டுஇ ஆலயத்தின் பூசாரியால்  சுகமடைவதற்கு பூசை  செய்யுமாறு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நோய்வாய்ப்பட்ட பெண்ணை விரைவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு  பூசாரியால் கூறப்பட்டதாகவும் எனினும், இறந்த பெண்ணின் சகோதரியின் வலுவான வேண்டுகோளின் பேரில் பாதிக்கப்ட்ட பெண்ணை சுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் குறித்த  பெண் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து  மீரிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மயங்கி விழுந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக மீரிகம காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்பின்னர் உயிரிழந்த பெண்ணுக்கு விரைவான ஆன்டிஜென் சோதனை மேற்கொய்யப்பட்டதில் அந்தப் பெண் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதேவேளைஇ எந்த நோயாக இருந்தாலும்இ பழைய புராணங்களைப் பின்பற்றாமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது என   மீரிகம சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் ருவன் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4