பிரான்ஸின் கொவிட் தொற்றுத் தரவுகள்

#world_news #Covid 19 #France
பிரான்ஸின் கொவிட் தொற்றுத் தரவுகள்

பிரான்ஸில் கொவிட் தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் இறப்பு விபரங்களை சுகாதார துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 9.144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. PCR பரிசோதனைகளின் அடிப்படையில் தொற்று வீதம் 1.9% ஆக உள்ளது. இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 926 604 பேராக அதிகரித்துள்ளது.

இந்த 24 மணிநேரத்தில் 452 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 9.555 பேர் மொத்தமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 119 பேர் புதிதாக அனுமதிக்கப்பட, மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1.959 ஆக உள்ளது.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 79 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 115.800 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 89.033 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4