ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை விஜயம்!

#SriLanka
Yuga
4 years ago
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.எதிர்வரும் 27ஆம் திகதி குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

GSP+ சலுகை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த குழு இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ள இந்த குழு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கும் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டம் முடிந்த கையோடு இந்த குழு இலங்கை வரவுள்ளமை விசேட அம்சமாகும்.

தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் இந்த குழு சந்திக்கவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4