சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் !

#SriLanka #Tourist
Yuga
4 years ago
சுற்றுலா பயணியாக இலங்கைக்கு  வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்  !

ராவணன் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த இளம்வயது பெண் பாறையில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்து பலத்த காயங்களுக்ககு உட் பட்டுள்ளதாக எல்ல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலில் இருந்து சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்திருந்த 23 வயது இளம் பெண்ணே இவ்வாறு பலத்த காயங்களுக்கு உட்பட்டுள்ளார்.

12 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக வந்திருந்த பெண் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு ஏற முயன்றபோது கால் தவறி பத்தடி பள்ளத்திற்குள் வீழ்ந்து உள்ளார்.

பலத்த காயங்களுக்கு உட்பட்டிருந்த பெண்ணை வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததனால் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4