இலங்கைக்கு ஏற்படப் போகும் ஆபத்து தொடர்பில் புவியியலாளர்கள் எச்சரிக்கை !

#SriLanka
Yuga
4 years ago
இலங்கைக்கு ஏற்படப் போகும் ஆபத்து தொடர்பில் புவியியலாளர்கள் எச்சரிக்கை !

இலங்கைக்கு அருகே பெரிய பூகம்பம் ஏற்படும் வாய்ப்புகள் புவியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு அருகிலுள்ள இந்திய-அவுஸ்திரேலிய பீடபூமியில் எதிர்காலத்தில் நில நடுக்கம் ஏற்படும் என சிரேஷ்ட புவியிய லாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன, இந்த எச்சரிக்கைய விடுத்துள்ளார்.

அத்துடன் இலங்கைக்குள் மட்டுமன்றி இலங்கைக்கு அருகிலும் பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் பேராசிரியர் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்களைப் பெற நான்கு கருவிகள் மாத்திரமே உள்ளன அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இவை 65,000 சதுர கிலோ மீற்றருக்குப் போதுமானவையல்ல என்றும் அவர் கூறினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டாலும், இதுவரை சரியான கவனம் செலுத்தப்படவில்லை என்றார்.

தற்போதே இந்த பூகம்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து ஆராய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4