விஜய் டிவி பிக் பாஸ் 5 - தனிமைப்படுத்தலில் முக்கிய பிரபலம்!

Prabha Praneetha
4 years ago
விஜய் டிவி பிக் பாஸ் 5 - தனிமைப்படுத்தலில் முக்கிய பிரபலம்!


விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ-க்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக முக்கியமானது.

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.

இந்த வருடமும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தாமதமாக ஆரம்பிக்கப்படும் எனவும் தெரியவந்துள்ளது . கடந்த 4 சீசன்களைப் போலவே இந்த சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

தவிர பிக் பாஸ் 5-ம் சீசனின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.

இன்னும் திகதி அறிவிக்கப்படாத நிலையில் பிக் பாஸ் 5 அக்டோபர் 3-ம் திகதி தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிளா (நடிகை ஷகிலாவின் மகள்), நமீதா மாரிமுத்து (நாடோடிகள் 2 பட புகழ்), மாடல் வனேசா குரூஸ், மிஸ்டர் இந்தியா கோபிநாத், பவானி ரெட்டி, பிரியங்கா தேஷ்பாண்டே, ப்ரியா ராமன் uள்ளிட்டோர் கலந்துக் கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4