நாளை தொடங்குகிறது கார்த்தியின் அடுத்த பட ஷூட்டிங்!

Prabha Praneetha
4 years ago
நாளை தொடங்குகிறது கார்த்தியின் அடுத்த பட ஷூட்டிங்!

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஒன்றில் நாயகியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

இந்த படத்திற்கு ’விருமன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் மகள் சினிமாவில் அறிமுகமாகும் செய்தி திரையுலக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தை குறுகிய நாட்களுக்குள் படமாக்கி முடிக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. நாளை மதுரையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் 40 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4