PHI மீது தாக்குதல் நடத்திய தேரர் பிரதமரின் ஆலோசகர் அல்ல 

#Attack #Police
Prathees
4 years ago
PHI மீது தாக்குதல் நடத்திய தேரர் பிரதமரின் ஆலோசகர் அல்ல 

கெக்கிராவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பல்லபெத்தே நந்தரதன தேரர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக பதவி வகிப்பதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகப்பிரிவு அறிக்கை இதனை குறிப்பிட்டுள்ளது.

நந்தரதன தேரர் தற்போது பிரதமரின் ஆலோசகராகவோ அல்லது வேறு எந்தவொரு பதவியும் வகிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கெக்கிராவை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கெக்கிராவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோசை பெற சென்ற  3 தேரர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். 

தடுப்பூசி மருந்தை வழங்குமாறு கோரிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த பொது சுகாதார பரிசோதர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4