பிக் பாஸ் சீசன் 5 பட்டியலில் அதிகரிக்கும் விஜய் டிவி பிரபலங்கள் !

Prabha Praneetha
4 years ago
பிக் பாஸ் சீசன் 5 பட்டியலில் அதிகரிக்கும் விஜய் டிவி பிரபலங்கள் !

சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகிறது.

கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்கான புரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது.

மேலும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிக்பாஸ் லோகோவை அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர்.

மேலும் வித்தியாசமான மற்றும்  பிரமாண்டமான முறையில் பிக் பாஸ் சீசன் 5-க்கான ப்ரோமோ வெளியாகி வருகிறது. இதனையடுத்து பிக் பாஸ் சீசன் 5 எப்போது தொடங்கப்படும், யார் யார் பங்கேற்கிறார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும், நிகழ்ச்சியில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வது முதல் என்ன மாதிரியான போட்டிகள் நடக்கும் என்பது வரை பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதங்கள் நாள் முழுவதும் டிரெண்ட் ஆகும்.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு நாளும், தினசரி வெளியிடப்படும் ப்ரோமோவுக்கு லட்சகணக்கான ரசிகர்கள் காத்திருப்பு, பிடித்த போட்டியாளர்களுக்கு ஆர்மி உருவாக்குவது என பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனும் கொண்டாட்டமாக இருக்கும்.

கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் கிடைத்துவிடும். இதனிடையே போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதில், குக் வித் கோமாளியில் பங்கேற்ற கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் அவரது மகள் ஆகியோரது பெயர்கள் அடிபடுகிறது.

மேலும் தொகுப்பாளினி பிரியங்கா, ரம்யா கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஜிபி முத்து, செய்தி வாசிப்பாளர் கண்மணி உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் தற்போது விஜய் டிவி தொகுப்பாப்பார் விஜே பப்பு பிக் பாஸ் ஷோவுக்கு வர போகிறார் என தகவல் வெளியாகி வைரலாகி இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்பு தனது பேச்சாற்றல் மூலம் விஜேவாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது இவர் ஸ்ரீகாந்த் நடிக்கும் புதிய படம் ஒன்றில் 2வது கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் விரைவில் நடைபெற உள்ளது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இவை அனைத்தும் உத்தேசமாக வெளியான பெயர்கள் தான் என்பதால் எப்போது அதிகாரப்பூர்வ தகவல் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4