கனடா கியுபெக் சுகாதார பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி! - சுகாதார அமைச்சர்

#world_news #Health #Canada
கனடா கியுபெக் சுகாதார பணியாளர்களுக்கு விரைவில் தடுப்பூசி! - சுகாதார அமைச்சர்

கனடா கியுபெக் மாகாணத்தின் சுகாதார அமைச்சர் கூறுகையில் ஒக்டோபர் நடுப்பகுதியில் கொவிட் தடுப்புசியின் இரண்டு டோஸ்களையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பெற்றுக்கொடுத்து, எதிர்வரும் ஆபத்துக்களை தவிர்க்க உள்ளார்.

கிரிஸ்டியன் டுபே மேலும் கூறுகையில் தங்கள் இணைப்பில் முழுமையாக இன்னும் தடுப்புசி ஏற்றாத 20000 தொழிலாளர் இருப்பதாகவும், அவர்களுக்கு இந்த டோஸ்களை பெற்றுக்கொடுப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

இன்று அவரை இதை மேற்கொள்ள காலக்கேடு உண்டா என்று கேட்ட போது 20000 பேருக்கு ஏற்றுவது இன்னும் சாத்தியம். அதில் 10000 பேர் கொவிட் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் உள்ளனர் என்றார்.

ஆனால் தடுப்பூசி இலக்குகள் அடையப்படாவிட்டால் ஒரு தற்செயல் திட்டத்தை தயார் செய்யுமாறு அவர் பிராந்திய சுகாதார அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

அதே வேளை சில பணியாட்கள் நிருவாக வேலைகளுக்குாக வீட்டிலிருந்து பணியாற்ற ஒதுக்கபடலாம் என்றும் டுபே கூறினார்.

அத்துடன் தமது பொது இணைப்பில் மேலும் குறைந்த பட்சம் 4000 தாதிமார்களை பணிபுரிய அரசு கவரவிருக்கிறது. எனினும் இது இன்னும் அறிவி்க்கப்படவில்லை என்று கூறி முடித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4