12 ஆண்டுகளின் பின் விடுதலையான தமிழ் அரசியல் கைதி

Nila
4 years ago
12 ஆண்டுகளின் பின் விடுதலையான தமிழ் அரசியல் கைதி

முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அரசியல் கைதியான நடராசா குகநாதன் கொழும்பு மேல்நீதிமன்றத்தினால்  (16.09.21 )இன்று விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டினை சேர்ந்த நடேசு குகநாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை  விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த நிலையில், 2009.05.19 ஆம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் மூன்று ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் 2012.03.24 அன்று தொடக்கம் ஒரு ஆண்டு புனர்வாழ்வு பெற்று 2013.03.23 அன்று விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் 2013.07.09 ஆம் திகதி அன்று தொலைபேசிமூலம் விசாரணைக்காக பயங்கரவாத விசாரணை பிரிவால் அழைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்டு பூசா சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் 2015ஆம் ஆண்டு நியூமகசின் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு கடந்த 8 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டிருந்தார். 

இந்நலையில் கடந்த 12 ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்ட நிலையில் சட்டமா  அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைவாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று (16.09.21) விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4