பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து நிறுவனத்தின் உதவியோடு தப்பிச்சென்ற ஆப்கான் வீராங்கனைகள்

#Afghanistan
Prasu
4 years ago
பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து நிறுவனத்தின் உதவியோடு தப்பிச்சென்ற ஆப்கான் வீராங்கனைகள்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவ படையினர், கடந்த மாதம் 31ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக வெளியேறினர்.

 இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியையும் அமைத்துள்ளனர். தாலிபான்கள் ஆட்சி செய்து வருவதால், அந்த நாட்டில் பெண்களின் உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் உள்ளிட்டவை பெரும் கேள்விக்குறியாக உள்ளது என்று உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தாலிபான்கள் விளையாட்டில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்ததால், ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜூனியர் மகளிர் கால்பந்து அணியை சேர்ந்த வீராங்கனைகள் 32 பேர் பாகிஸ்தான் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த 32 கால்பந்து வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் இங்கிலாந்தை சேர்ந்த அமைதிக்கான கால்பந்து எனும் தொண்டு நிறுவனம் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும், மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4