கொழும்பு வைத்தியசாலையில் மீட்கப்பட்ட குண்டு அமைச்சர் வீட்டில் இருந்து எடுத்தது - கைதான தமிழ் சந்தேக நபர் தெரிவித்த தகவல்கள்

#Arrest #Colombo #Police
Nila
4 years ago
கொழும்பு வைத்தியசாலையில் மீட்கப்பட்ட குண்டு அமைச்சர் வீட்டில் இருந்து எடுத்தது - கைதான தமிழ் சந்தேக நபர் தெரிவித்த தகவல்கள்

கொழும்பு - நாரஹேன்பிட்டி, லங்கா வைத்தியசாலையின் கழிவறையிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பயங்கர்வாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் அவர் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றார்.  

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின்  உறுதிச் சான்றிதழைப் பெற்று, அவரை நேற்று  மாலை முதல் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருவதாக விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.  

  கைது செய்யப்பட்டவர்,  திருகோணமலை - உப்புவெளியை சேர்ந்த 26 வயதானவராவார். வைத்தியசாலையிலிருந்து பணப் பரிசில் பெறும் நோக்கில் இவ்வாறு  குண்டை வைத்துவிட்டு, அது தொடர்பில் தகவல் அளித்துள்ளதாக விசாரணைகளில்  குறிப்பிட்டதாக பொலிஸார் கூறினர்.

குறித்த கைக்குண்டானது, கொழும்பு 7 விஜேராம பகுதியில் உள்ள பிரபு ஒருவரின் வீட்டிலிருந்து தனக்கு கிடைத்ததாக சந்தேக நபர் விசரணையின் போது பொலிஸாருக்கு தகவல்கலை வெளியிட்டதாக அறிய முடிகின்றது.

 குறித்த வீட்டில் 3 மாதங்களுக்கு முன்னர் தான் புதுப்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது அவ்வீட்டின் அறையொன்றின் மேசை இலாச்சியிலிருந்து அந்த குண்டு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. 

இந் நிலையில் அது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்த போது, சந்தேக நபர் கூறும் வீட்டில் தற்போது அமைச்சர் ஒருவர் குடியிருப்பது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் சந்தேக நபர் கூறும் 3 மாதங்களுக்கு முன்னரான காலப்ப்குதியில் அவ்வமைச்சர் அங்கு இருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவித்தன.

 எவ்வாறாயினும் சந்தேக நபரின் வாக்கு மூலத்தின் உண்மைத் தன்மை தொடர்பிலும் மேலதிக விடயங்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4