சுவிற்சலாந்தில் 2022ற்கு முன்னர் 3வது தடுப்பூசி வழங்கப்படுமா?

#world_news #Covid 19 #Switzerland
சுவிற்சலாந்தில் 2022ற்கு முன்னர் 3வது தடுப்பூசி வழங்கப்படுமா?

சுவிற்சலாந்தில் 15 செப்டம்பர் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று காரணமாக 2 பேர் இறந்துள்ளனர்.

சுவிற்சலாந்தைச்சேர்ந்த சுவிஸ் மெடிக் நிறுவனம் நேற்று அவர்களது இரண்டு தடுப்பூசி தயாரிப்பாளர்களும் தத்தம் மும்மொழிவுகளையும், துணைத்தரவையும் சமர்ப்பித்ததாக கூறினர்.

இந்த நிறுவனம் மூன்றாவது தடுப்பூசிக்கான பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ தரவுகளை மதிப்பாய்வு செய்து வருகிறது.

சுவிற்சலாந்தில் பயன்படுத்தப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசி 12 மாதங்களுக்கு அனைத்து வகையான வைரஸ்களுக்கும் எதிரான பாதுகாப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் 2022 ஆண்டுக்கு முன்னர் இந்த 3வது தடுப்பூசியை செலுத்துவதற்கு பெடரல் பொது சுகாதார அலுவலகம் எதிர்பார்க்கவில்லை.

கொவிட் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உட்புற பொது இடங்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை அறிவித்த பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் சுவிட்சர்லாந்தில் தடுப்பூசிகளின் விகிதம் அதிகரித்துள்ளது.

அயல் நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஜேர்மனி ஏற்கனவே தமது மககளுக்கு 3வது தடுப்பூசியை வழங்கத்தொடங்கியுள்ளன. வரும் ஒக்டொபரில் ஆஸ்தரியா செயல்பட திட்டமிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியமான மக்களுக்கு 3வது தடுப்பூசியை பரவலாகப் பயன்படுத்துவதை எதிர்க்கிறது. இதற்கு பதிலாக கடுமையாக தாக்கத்திற்குள்ளாகியிருக்கும் வறிய நாடுகளுக்கு இவற்றை விநியோக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4