போதைப்பொருள் விற்பனை:  STF புலனாய்வு பிரிவு சார்ஜன்ட் கைது

#Arrest #Police
Prathees
4 years ago
போதைப்பொருள் விற்பனை:  STF புலனாய்வு பிரிவு சார்ஜன்ட் கைது

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில்  விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜகிரிய பகுதியில் 7 கிலோகிராம் கேரள கஞ்சா மற்றும் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,  குறித்த அதிரடிப்படை சார்ஜன்ட் தனக்கு போதைப் பொருள் வழங்கிய தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபர் மூலமாக குறித்த நபரை சூட்சுமமாக வரவழைத்து கைது செய்ய அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

 கைது செய்யப்பட்ட விசேட அதிரடிப்படையின் சார்ஜன்ட், இராஜகிரிய முகாமில் கடமையாற்றிவருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4