சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம்

Prasu
3 years ago
சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக களமிறங்கும் குக் வித் கோமாளி பிரபலம்

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கொரோனா காலத்தில் சிறியவர்களுக்கான நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது, நோய் தொற்று பிரச்சனையால் அப்படியே நிறுத்தப்பட்டது.

தற்போது பெரியவர்களுக்கான புதிய சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, அதுவும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.இந்த சீசனில் ஜெயிக்கப்போவது யார் என்ற கருத்துக் கணிப்புகளும் நிறைய நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் பிக்பாஸ் 5வது சீசனில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே கலந்துகொள்கிறார் என செய்தி வந்தது.

இப்போது இதற்கு மேல் வரப்போகும் சில சூப்பர் சிங்கர் எபிசோடுகளை குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி பிரியங்காவிற்கு பதிலாக தொகுத்து வழங்க இருக்கிறார்.ஷிவாங்கி அதன் ஒரு புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை வரும் நாட்களில் தொகுப்பாளர் மா கா பா தொகுத்து வழங்கவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!