இலங்கையை வந்தடைந்த 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள்
Prabha Praneetha
4 years ago
மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி தொகையுடன் கூடிய விமானம் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, இலங்கை தனது தடுப்பூசி வேலைத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1 மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதி செய்திருந்தது.
ஆகஸ்ட் இறுதி வரை சுமார் 50 நாடுகளில் 1.8 பில்லியன் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1.4 பில்லியன் டோஸ்கள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே