தாய், தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு

#Cinema
Yuga
4 years ago
தாய், தந்தை உட்பட 11 பேருக்கு எதிராக  நடிகர் விஜய் வழக்கு

தளபதி விஜய் தனது தாய், தந்தை உள்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சமீபத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்தது. இந்த கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்ஏ சந்திரசேகர், பொருளாளராக ஷோபா மற்றும் தலைவராக பத்மநாபன் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் விஜய் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புத் அறிவிக்கப்பட்டதோடு தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் வழக்கு தொடர்ந்தார். சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சந்திரசேகர், ஷோபா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் விஜய் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகாததால் இந்த வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். தந்தை தாய் உள்பட 11 பேர் மீது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4