வைகைபுயல் வடிவேலுவுக்கு ஜோடி கீர்த்தி சுரேசா? லைகாவுக்காக சம்மதித்த கீர்த்தி சுரேஸ்.

Shelva
3 years ago
வைகைபுயல் வடிவேலுவுக்கு ஜோடி கீர்த்தி சுரேசா? லைகாவுக்காக சம்மதித்த கீர்த்தி சுரேஸ்.

ரஜினியுடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, செல்வராகவன் உடன் சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷை இந்த படத்தில் நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அவரும் கிட்டத்தட்ட ஓகே சொல்லும் மன நிலையில் தான் உள்ளதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெயிட்டான ரோல் வடிவேலுக்கு இணையான வெயிட்டான ரோல் ஹீரோயினுக்கும் இருப்பதால் நிச்சயம் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிக்க சம்மதிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோயின் கன்ஃபார்ம் ஆன உடனே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே டைட்டில் நாய் சேகர் டைட்டிலில் நடிகர் சதீஷ் நடித்து வரும் நிலையில், வடிவேலு சுராஜ் இணையும் இந்த படத்திற்கு வேறு ஒரு புதிய டைட்டில் வைக்கலாம் என இயக்குநர் சுராஜ் சொன்னாலும், நாய் சேகர் டைட்டிலே வேண்டும் என வடிவேலு உறுதியாக இருந்ததால் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற டைட்டிலை சுராஜ் வைத்திருப்பதாகவு கூறப்படுகிறது.

வரும் ஆயுத பூஜைக்கு வடிவேலு சுராஜ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெரிய அளவில் பல சினிமா நட்சத்திரங்களை வைத்து வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் பொன்னியின் செல்வன் பட நடிகர்களை வைத்தே ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!