காளான் குடைமிளகாய் பொரியல்

Prabha Praneetha
4 years ago
காளான் குடைமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள்

காளான் - 250 கிராம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 2 பல்

குடைமிளகாய் - 1

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

செய்முறை

வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாய், காளானை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கி விட வேண்டும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும் அதில் மிளகுத் தூள் சேர்த்து, குறைவான தீயில் பிரட்டி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து பிரட்டி மூடி வைத்து, காளான் நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது  சூப்பரான காளான் குடைமிளகாய் பொரியல் ரெடி...


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4