வவுனியாவிலிருந்து பிரான்ஸ்சிற்கு கொரோனாத் தொற்றுடன் தப்பி வந்த 5 பேர்!!

#France #Vavuniya #Covid 19 #Corona Virus
வவுனியாவிலிருந்து பிரான்ஸ்சிற்கு கொரோனாத் தொற்றுடன் தப்பி வந்த 5 பேர்!!

வவுனியாவில் திருமண நிகழ்வி்ற்காக கலந்துகொள்ள வந்திருந்த பிரான்ஸைச் சேர்ந்தவர்கள் தமது பிசிஆர் பரிசோதனை பெறுபேறு கிடைக்க முன்னரே மீண்டும் பிரான்ஸிற்கு திரும்பியுள்ளனர்.

இது குறித்து மேலும் அறியவருவதாவது,

வவுனியா, தவசிகுளம் பகுதியில் திருமணம் ஒன்றிக்காக பிரான்ஸில் இருந்து 6 பேர் வருகை தந்திருந்தனர். அவர்கள் மீளவும் வெளிநாடு செல்வதற்காக யாழ்ப்பாணம் ஆசிரியர் கல்லூரியில் பிசீஆர் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களது பிசீஆர் முடிவுகள் நேற்று இரவு (19) வெளியாகிய நிலையில் குறித்த 6 பேரில் 5 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுகாதாரப் பிரிவினர் குறித்த 5 பேரையும் தனிமைப்படுத்த சென்ற போது அவர்கள் மீண்டும் பிரான்ஸ் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிசீஆர் முடிவு வருவதற்கு முன்னர் குறித்த 6 பேரும் வீட்டில் இருந்து வெளியேறி வெளிநாடு சென்றுள்ளதாகவும், அதில் 5 பேர் கோவிட் தொற்றுடனேயே வவுனியாவில் இருந்து சென்றுள்ளதாகவும் சுகாதரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், குறித்த தொற்றாளர்கள் தொற்றுடன் எவ்வாறு வெளிநாடு சென்றார்கள் என்பது குறித்தும் சுகாதாரப் பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடு சென்றவர்கள் நீர்கொழும்பில் பிசிஆர் சோதனை மேற்கொண்டு, அதில் எதிர்மறை பெறுபேற்று சான்றிதழை பெற்றிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4