மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து விசாரணை வேண்டும் – மஹிந்த அமரவீர

Prabha Praneetha
4 years ago
மதுபானசாலைகள் திறக்கப்பட்டமை குறித்து விசாரணை வேண்டும் – மஹிந்த அமரவீர

மதுவரி ஆணையாளருக்கு தெரியாமல் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருந்தால் அது பாரிய பிரச்சினை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்த விடயம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மதுபான சாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மதுபான சாலைகள் திறப்பதற்கு அரசாங்கமும் அனுமதி வழங்கவில்லை. சுகாதார பிரிவினரும் அனுமதி வழங்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. அப்படியென்றால் யாருடைய உத்தரவில் திறக்கப்பட்டது என்பது தொடர்பில் பார்க்க வேண்டும்.

அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் மதுபான சாலைகளை திறந்து வைப்பது பொருத்தமான விடயமாக தெரியவில்லை. அப்படியானால் அரச ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில்தான் இருக்க வேண்டிவரும்.

கொவிட் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் வரையறைகளை விதித்திருக்கும் நிலையில் மதுபான சாலைகளை திறக்கவேண்டிய தேவையில்லை.

அவ்வாறு இருந்தும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டிருப்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவேண்டும் என நிதி அமைச்சிடமும் விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்துடன் இந்த நடவடிக்கை அரச அதிகாரிகளின் விருப்பத்திற்கு மேற்கொள்ளப்பட்டதா, மதுபானசாலை உரிமையாளர்களின் தேவைக்காக இடம்பெறுகின்றதா அல்லது அவர்களிடம் மதுபானம் அருந்தும் அரச அதிகாரின் விருப்பத்திற்கமைய இடம்பெற்றதா என்பது குறித்து ஆராய வேண்டும்” என கூறினார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4