வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் ஐந்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

#Death #Police
Prathees
4 years ago
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் ஐந்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

மதுருப்பிட்டிய மாஓய பாலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல்போன நபர், ஐந்து நாட்களின் பின்னர் இன்று சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

லோலுவாகொட பிரதேசத்தைச் சேர்ந்த விசு ஏ.அமரசிங்க (வயது 60) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவர் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிளில், மீரிகமவிலிருந்து அலவ்வதல்வத்த பிரதேசத்துக்குச் செல்லும்போது பாலத்தைக் கடக்க முற்பட்டுள்ளார்.

பாலத்துக்கு மேல் ஓர் அடிக்கு வெள்ளம் வழிந்தோடிய நிலையில் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார் என்றும் தெரியவருகின்றது.

குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் கடந்த 18ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தைத் தேடும் பணியில் பொலிஸாரும் இணைந்து ஈடுபட்டு வந்த நிலையிலேயே, சடலமானது மிகவும் உக்கிய நிலையில் கிரிஉல்ல பாலத்துக்கு அருகிலில் புதரிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4