வரலாற்றில் இன்று செப்டம்பர் 22…!!

#today #history
Yuga
4 years ago
வரலாற்றில் இன்று செப்டம்பர் 22…!!

இன்றைய தின நிகழ்வுகள்

1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர்.

 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர்.
1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர்.

1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர்.

1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது.

1789 – ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் தோற்கடித்த அலெக்சாந்தர் சுவோரொவ் உருசிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

1857 – உருசியாவின் லெபோர்ட் என்ற கப்பல் பின்லாந்து வளைகுடாவில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 826 பேர் உயிரிழந்தனர்.

1896 – பிரித்தானியாவின் அரச வம்சத்தில் விக்டோரியா மகாராணி அவருடைய தாத்தா மூன்றாம் ஜார்ஜை விட அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையைப் பெற்றார்.

1914 – செருமனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் இரவு 9:30 மணிக்கு சென்னைத் துறைமுகத்தையும் மற்றும் நகரப் பகுதிகளையும் குண்டுவீசித் தாக்கியது. மொத்தம் 130 குண்டுகளை அது வீசியது.

1934 – வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.

1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்து முற்றுகையின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக செருமானிய-சோவியத் இராணுவ அணிவகுப்பு பிரெஸ்த்-லித்தோவ்சுக் என்ற இடத்தில் இடம்பெற்றது.

1941 – யூதர்களின் புத்தாண்டில் உக்ரைனின் வின்னிட்சியா நகரில் 6,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் முதல் நாட்களில் கொல்லப்பட்ட 24,000 யூதர்களில் உயிர் தப்பியோராவர்.

1960 – மாலிக் கூட்டமைப்பில் இருந்து செனிகல் விலகியதை அடுத்து சுடானியக் குடியரசு மாலி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1965 – இந்திய-பாகிஸ்தான் போர், 1965: இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் காஷ்மீர் தொடர்பாக இடம்பெற்ற போர் ஐநாவின் போர் நிறுத்த அழைப்பை ஏற்று முடிவுக்கு வந்தது.

1970 – மலேசியாவின் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தனது பதவியில் இருந்து விலகினார்.

1975 – ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜெரால்ட் ஃபோர்ட் கொலை முயற்சியில் தப்பினார்.

1980 – ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.

1993 – அலபாமாவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் தடம் புரண்டதில் 47 பயணிகள் உயிரிழந்தனர்.

1993 – ஜோர்ஜியாவின் பயணிகள் விமானம் ஒன்று சுகுமி என்ற இடத்தில் தீவிரவாதிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.

1995 – அலாஸ்காவில் போயிங் விமானம் ஒன்று பறவைகள் தாக்கியதன் காரணமாக வீழ்ந்ததில் அதில் அபயணம் செய்த அனைத்து 24 பேரும் உயிரிழந்தனர்.

1995 – நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 34 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

2013 – பாக்கித்தான், பெசாவர் நகரில் கிறித்தவத் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டனர்.

2014 – நாசாவின் மாவென் விண்கலம் செவ்வாய்க் கோளின் சுற்றுவட்டத்தை அடைந்தது.

இன்றைய தின பிறப்புகள்

1791 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1867)
1834 – இராபர்ட் புருசு ஃபூட், பிரித்தானிய நிலவியலாளர், தொல்லியலாளர் (இ. 1912)

1863 – அலெக்சாண்டர் எர்சின், சுவிட்சர்லாந்து மருத்துவர், நுண்ணியலாளர் (இ. 1943)

1869 – வலங்கைமான் சங்கரநாராயண ஸ்ரீநிவாஸ சாஸ்திரி, இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் (இ. 1946)

1869 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, திருவாங்கூர் திவான் (இ. 1948)

1916 – விந்தன், தமிழக எழுத்தாளர், இதழாசிரியர் (இ. 1975)

1930 – பி. பி. ஸ்ரீநிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணி பாடகர் (இ. 2013)

1930 – தி. ச. சின்னத்துரை, சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி (இ. 2016)

1931 – அசோகமித்திரன், தமிழக எழுத்தாளர் (இ. 2017)

1933 – அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர்

1934 – டிமோதி இம்பவன்றா, பிஜி அரசியல்வாதி (இ. 1989)

1939 – ஜூன்கோ டபெய், சப்பானிய மலையேறி

1950 – பவன் குமார் சாம்லிங், சிக்கிம் மாநிலத்தின் 5வது முதலமைச்சர்

1959 – சோல் பெர்ல்மட்டர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், வானியலாளர்

1962 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்துத் துடுப்பாளர் (இ. 2016)

1970 – கிளாடிசு பெரெசிக்லியன், ஆத்திரேலிய அரசியல்வாதி

இன்றைய தின இறப்புகள்

1539 – குரு நானக், சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469)
1828 – சாக்கா சூலு, சூலு பேரரசர் (பி. 1787)

1972 – புலவர் குழந்தை, தமிழகத் தமிழறிஞர், புலவர் (பி. 1906)

2009 – எஸ். வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (பி. 1927)

2009 – ஆர். பாலச்சந்திரன், தமிழகக் கல்வியாளர், கவிஞர்

2013 – டேவிட் ஹண்டர் ஹியூபெல், நோபல் பரிசு பெற்ற கனடிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1926)

இன்றைய தின சிறப்பு நாள்

விடுதலை நாள் (பல்காரியா, உதுமானியப் பேரரசிடம் இருந்து 1908)
விடுதலை நாள் (மாலி, பிரான்சிடம் இருந்து 1960)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4