நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

#Accident
Yuga
4 years ago
நாரம்மல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

குருநாகல் மாவட்டம், நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஉல்ல வீதி - பொதுகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வீதியில் பயணித்த கார் ஒன்று அதே வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற கோன்வௌ பிரதேச்தைச் சேர்ந்த 38 வயது குடும்பஸ்தர் படுகாயமடைந்தார். அவர் உடனே நாரம்மல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் நாரம்மல பெரிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4