போலி கடவுச் சீட்டில் இத்தாலி செல்ல முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

#SriLanka #Airport #Arrest
Nila
4 years ago
போலி கடவுச் சீட்டில் இத்தாலி செல்ல முயன்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

பொய்யான தகவல்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலிக்கு செல்ல முயன்ற இலங்கை இளைஞர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு துறையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி கடவுச்சீட்டு மற்றும் இத்தாலிய குடியுரிமை விசாவைப் பயன்படுத்தி சந்தேக நபர் துபாய் வழியாக இத்தாலிக்கு தப்ப முயன்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4