விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் வெள்ளி முதல் ஆரம்பம்!

#Covid Vaccine #SriLanka
Prasu
4 years ago
விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றல் வெள்ளி முதல் ஆரம்பம்!

12 வயதுக்கு மேற்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வௌ்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பில் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நாளைமறுதினம் சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தலசீமியா உள்ளிட்ட ஏனைய நோய்களுக்குள்ளான சிறுவர்களுக்கு அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை பைசர் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஏனைய வைத்தியசாலைகளில் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் குறிப்பிட்டார்.

12 வயது தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கே பைசர் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4