கிளிநொச்சி காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளும் ஏலக்காயும் மீட்பு

#Kilinochchi #Police
Prathees
4 years ago
கிளிநொச்சி காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சளும் ஏலக்காயும் மீட்பு

சூட்சுமமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு கிளிநொச்சி கௌதாரிமுனையில் வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

நேற்று  பிற்பகல் 2.30 மணி அளவில் குறித்த  சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சூட்சுமமான முறையில் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு வெட்டுக்காடு பகுதியில் உள்ள சிறு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட தகவல் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளது.

இதனையடுத்து பூநகரி பொலிஸாரும்இ இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது  வெட்டுக்காடு பகுதியில் 2015 கிலோ 600 கிராம் மஞ்சள் மற்றும் 30 கிலோ 100 கிராம் ஏலக்காயும் மீட்கப்பட்டதுடன்  28 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கிளிநொச்சி நீதிமன்றில் இன்று (23) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4