இலங்கையில் கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைகளில் பராமரிக்க உறவினர்களுக்கு அனுமதி

#SriLanka #Corona Virus #Hospital
Yuga
4 years ago
இலங்கையில் கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைகளில்  பராமரிக்க உறவினர்களுக்கு அனுமதி

கொரோனா தொற்றாளர்களை பராமரிக்க நோயாளர்கள் விடுதியில் உறவினர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் வவுனியா வைத்தியசாலையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உறவினர்கள் எவரும் அருகில் இருந்து பராமரிக்க அனுமதிக்கப்படாமையினால் நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் அதிகளவான மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ,இதன் காரணமாக சுகாதார அமைச்சு இலங்கையில் முதற்கட்டமாக வவுனியா மற்றும் மொனராகலை வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்கு உறவினர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4