மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது

#Arrest #Batticaloa #Police
Prathees
4 years ago
மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண்கள் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் வீடு ஒன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  இன்று அதிகாலை குறித்த  கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

இத்போது 15,000 மில்லி லீற்றர் கசிப்பு கசிப்பு உற்பத்திக்கான கோடா 140,000 மில்லி லீற்றர் மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களும் மீட்கப்பட்டன.

இதன்போது இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை நடாத்தி வந்ததாக சந்தேகதிக்கப்படும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4