சிம்பு பட இயக்குனருடன் இணைந்த விஷால்..

Prabha Praneetha
4 years ago
சிம்பு பட இயக்குனருடன் இணைந்த விஷால்..

தமிழ் சினிமாவில் திரிஷா இல்லன்னா நயன்தாரா படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதனையடுத்து நடிகர் சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படத்தை இயக்கினார்

தற்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இது தவிர அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்து பேசிய பின்னர் தனது எண்ண ஓட்டம் மாறிவிட்டதாக கூறியுள்ள ஆதிக் இனி அடல்ட் கதைகளை இயக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பஹீரா படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.

இதனை அடுத்து தனது அடுத்த படத்திற்காக கதை எழுதி வந்த ஆதிக் ரவிச்சந்திரன் பல முன்னணி நடிகர்களை சந்தித்து கதை கூறியுள்ளார

இந்நிலையில் தான் இறுதியாக, நடிகர் விஷாலை சந்தித்து ஆதிக் ரவிச்சந்திரன் கதை கூறியுள்ளார். அவர் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே விஷால் ஒகே சொல்லிவிட்டாராம்.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படத்தைத் தயாரித்த மினி ஸ்டுடியோ நிறுவனமே, இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4