பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடன் நேற்று பேச்சு!

#world_news
பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடன் நேற்று பேச்சு!

நீர்மூழ்கி கப்பல் விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளின் பின்னர், நேற்று புதன்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடுகின்றார்.

இதனை அரச பேச்சாளர் Gabriel Attal இதனை உறுதி செய்துள்ளார்.

அண்மைய நாட்களில் ‘பிரான்ஸ்-அமெரிக்க’ நட்புறவில் விரிசல் விழுந்தது. இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து, ஜோ பைடனுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று புதன்கிழமை தொலைபேசியில் உரையாடினார்.

பிரான்ஸ் அவுஸ்திரேலியா அமெரிக்கா இணைந்து போடப்பட்ட AUKUS ஒப்பந்தத்தில் இருந்து தற்போது அவுஸ்திரேலியா வெளியேறியது. பல பில்லியன் பெறுமதியுள்ள இந்த ஒப்பந்தம் இரத்தாவது தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோக்ம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரு அரசாங்களையும் சாடியிருந்தார். அத்தோடு இரு நாடுகளிலும் இருந்து தங்களது தூதுவர்களை திரும்ப அழைப்பதாகவும் ஜனாதிபதி மக்ரோன் அறிவித்திருந்தார்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4