கல்முனையில் இளைஞன் மீது வாள் வெட்டு

#Police #Kalmunai #Attack
Prathees
4 years ago
கல்முனையில் இளைஞன் மீது வாள் வெட்டு

அம்பாறை மாவட்டம் கல்முனை மதரஸா வீதியில்  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ள போது நேற்று  காலை தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர்களை நிறுத்தி வேகமாக வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று பாதிக்கப்பட்ட இளைஞனின் தரப்பு அறிவுரை கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்கள் அவ்விடத்திற்கு சென்று வாள்களினால்  அறிவுரை கூறியவர்கள் மீது  வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

இதனால் இச்சம்பவத்தில் 19 வயது மதிக்கத்தக்க முஹம்மத் ஸபான் என்பவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் வீட்டு வாயில் கதவு போன்றவற்றில் வெட்டுத்தடயங்கள் உள்ளதையும் இரத்த தடயங்கள்  காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4