இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் பிரித்தானியாவில் சடலமாக மீட்பு

#Death #SriLanka #Women
Prasu
4 years ago
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண் பிரித்தானியாவில்  சடலமாக மீட்பு

பிரித்தானியாவில் மாகேட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு திருஷிக்கா என்ற இளம்பெண் தன் தோழிகளுடன் சென்றுள்ளார். மேலும் அவர்கள் அதன் அருகே இருந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணின் தோழிகள் அனைவரும் விடுதி திரும்பிய நிலையில் திருஷிக்காவை மட்டும் காணவில்லை.

இதனை தொடர்ந்து அப்பெண்ணின் தோழிகள் அவரை பல இடங்களில் தேடியும் திருஷிக்கா கிடைக்கவில்லை. இறுதியாக கடற்கரையில் கடந்த 11 ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் திருஷிக்கா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் குயின் எலிசபெத் மருத்துவமனையில் தனது சகோதரியுடன் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் இலங்கையை பூர்விகமாக கொண்டவர் என்று தெரிய வந்துள்ளது. அதிலும் இவரின் தந்தையும் சிறந்த மருத்துவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவரின் மரணம் தொடர்பான எந்தவித தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4