IPL Match34 - கொல்கத்தாவுக்கு 156 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த மும்பை அணி

Prasu
4 years ago
IPL Match34  - கொல்கத்தாவுக்கு 156  ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்த மும்பை  அணி

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினார்.

அந்த அணியின் டி காக் உடன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ரோகித் சர்மா 30 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது மும்பை இந்தியன்ஸ் 9.2. ஓவரில் 78 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ரோகித் சர்மா ஆட்டமிழந்தபின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் வேகத்தில் தடைஏற்பட்டது.

2 விக்கெட் வீழ்த்திய பெர்குசன்

அதிரடி வீரர் பொல்லார்டு  15 பந்தில் 21 ரன்கள் அடித்து ரன்அவுட் ஆனார். இறுதியாக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பெர்குசன், பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4