சுவிற்சலாந்தில் வீடு அல்லது சொத்தை வாங்க முன் கவனிக்க வேண்டியவை.

#world_news
சுவிற்சலாந்தில் வீடு அல்லது சொத்தை வாங்க முன் கவனிக்க வேண்டியவை.

நீங்கள் ஒரு வீட்டை வாங்க கனவு காண்கிறீர்களா? அது இலாபமா? இல்லையா? இதோ சில குறிப்புகள் நீங்கள் வீடுவாங்கும் போது கவனிக்க வேண்டியது.

பிரசித்த நொத்தாரிசு கட்டணம்

இது ஒரு ஒப்பமும் முத்திரையும் வைப்பதற்கு இவ்வளவு பணமா, என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் ஒரு பிரசித்த நொத்தாரிசு வீடு வாங்குவதற்கு தேவையான சகல் சட்ட சம்பந்தமானவை குறிப்பிடப்பட்டுள்ளதாக என்று பரிசீலித்துக்கொள்வதோடு யாதும் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக என்பதையும் பார்த்துக்கொள்வார்.
இதை நீங்கள் தவிர்க்க முடியாது. இதற்கான பணத்தை வாங்குவோரும் விற்போரும் பங்கிட்டு கொள்வர். இது கன்டோனுக்கு கன்டோன் மாறுபடும். 

ஈட்டு அல்லது அடைமான கட்டணங்கள்

நீங்கள் வீடு ஒன்றை வாங்க உங்களின் வங்கியில் பணம் வைத்திருக்கும் ஒருவராயின், மனதில் வைத்துக்கொள்ளுங்கள் வீடு ஈடு வைப்பதற்கான வட்டி சுவிற்சலாந்தில் மிகக் குறைவு. அத்துடன் திருப்பி செலுத்தும் காலமும் கூடியளவு இருக்கும்.
ஏனைய நாடுகளில் இது 30 வருடங்களாக இருந்தால் சுவிஸில் 50-100 வருடங்களாக இருக்கும்.

சொத்திற்கான வாடகை பெறுமானம்

வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு இது வியப்புட்டுவதாக இருக்கலாம் ஆனால் இந்த வரி நீங்கள் சொத்து ஒன்றை வாங்க முன் கவனிக்க வேண்டும்.
நீங்கள் ஒரு முதலீட்டை வாங்குகிறீர்களோ இல்லையோ, நீங்கள் இதனை அந்த சொத்திற்கான கணிப்பிட வேண்டும் இதனை நீங்கள் உங்கள் கணக்காளர் அல்லது வரி ஆலோசகர் உடன் கலந்தாலோசிக்கலாம். 

கட்டிடக் கலைஞர் அல்லது பொறியியல் செலவுகள்

உங்கள் சொத்தை வாங்க முன் மேற்கூறியவர்களிடன் அதனை காண்பித்து அவர்களின் கண்களுக்கு ஏதும் குறைபாடாக உள்ளதா? என்று ஆலோசித்துக்கொள்ளல் நல்லது. இதற்கு உங்களுக்கு 1000பிராங்குகள் கட்டணம் இந்த அனுமதியைப்பெற கொடுக்க வேண்டிவரலாம். ஆனால் வாங்கிய பின் அதற்கு செலவு செய்வதிலும் பெரும்பாலும் இலாபகரமானது.

முதல் இலாபங்கள்

இந்த வரி ஒரு சொத்து பரிமாறுதலின் போது சுவிற்சலாந்தில் ஒரு விற்பவரால் பொறுப்பேற்க வேண்டியதொன்று என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

காணி பதிவு கட்டணம்

காணிகள் பதிவு கந்தோரில் நீங்கள் உங்கள் சொத்தை பதிவு செய்யும் போது கட்ட வேண்டிய ஒரு கட்டணம் இதுவாகும். கொள்விலையின் 1.5வீதமாக இருக்கும். இது பெரும்பாலும் வாங்குவோரே பொறுப்பாளியாக இருப்பார்.

சொத்து பரிமாற்ற வரி

ஒரு சொத்தானது மாற்றப்படும் போது இந்த கட்டணம் அறவிடப்படும். சில கன்டோன்களில் இது பதிவு மாற்ற கட்டணம் என்றும் கூறுவர்.
சில கன்டோன்களில் இது விற்பவரால் கட்டவேண்டி வரலாம்.

வரலாற்று கட்டிடங்கள்

சுவிற்சலாந்தில் உறுதியான பண்பாடு இந்த வரலாற்றுக்கு உண்டு. இது வீடு வாங்குதலுக்கும் பொருந்தும். சுமார் 75000 சொத்துக்கள் சுவிற்சலா்நதில் பட்டியல் இடப்பட்டுள்ளது. இவற்றில் சிலது சட்டத்தினால் பாதுகாக்கப்படுபவை.
இதற்கான மேலதிக பாதுகாப்பிற்கு வரி குறைப்புகள் உரிமையாளருக்கு உண்டு. இருந்தாலும், இதனை திருத்த அல்லது மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் உங்களுக்கு பாரிய தொல்லையாக இருக்கலாம்.

முகவர் கட்டணம்.

ஒரு முகவர் ஊடாக நீங்கள் ஒரு வீட்டை வாங்குவது மிகவும் சுலபமானதும் பெரும்பாலும் நடைமுறைக்கு இலகுவானதுமாக இருக்கும். பெரும்பாலான வெளிநாட்டவர் இந்த முறையை கையாள்வர்.
ஒரு ஒன்லைன் மூலமாக நீங்கள் சொத்தை தேடினாலும் அதற்கான முகவர் கட்டணம் இருக்கலாம். நீங்கள் ஒரு முகவர் மூலம் சொத்தை வாங்குவதாக இருந்தால் கட்டணம், 1-3 வீதம் வாங்கும் விலையிலிருந்து இருக்கும். 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4