இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு விழா ரத்து!

Prasu
4 years ago
இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு விழா  ரத்து!

கொரோனா பரவலைத் தவிா்ப்பதற்காக இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்படுவதாக அந்தப் பரிசுகளை வழங்கி வரும் அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள நோபல் அறக்கட்டளை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11-ஆம் தேதி வரை அறிவிக்கப்படவுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி மூலமும் மிக எளிமையான நிகழ்ச்சிகள் மூலமும் வரும் டிசம்பரில் நோபல் பரிசு வழங்கப்படும்.

நோபல் பரிசுகளை வென்றவா்கள் அவா்களது சொந்த நாட்டிலிருந்தபடியே அந்தப் பரிசுகளைப் பெற்றுக்கொள்வாா்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4