டெல்டா வகை கொரோனா வைரஸால் உடலில் புதிய தாக்கம்
குஜராத் உயிரியல் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் டெல்டா வகை கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தால் குஜராத்தில் உள்ள மக்களிடம் அதிக ஆண்ட்டிபாடிகள் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிட வழி பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா இரண்டாவது அலையால், இந்தியாவின் மற்ற பகுதிகளை போல, குஜராத் அதிக அளவு பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது அலையால் அங்கு அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி, ஒரே நாளில் 14605 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
ஒரு நிமிடத்திற்கு 10 பேர் வீதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் டெல்டா வகை கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
முந்தைய கொரோனா வைரஸின் ரகங்களை விட டெல்டா ரக வைரஸ் காரணமாக உடலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகின்றது என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. டெல்டா ரக கொரோனா வைரஸால் சிறிதளவு பாதிக்கப்பட்டாலும், உடலில் அதிக அளவிளான நோய் எதிர்ப்பு சக்தியை இவை உருவாக்குகின்றன என்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.