மீண்டும் சின்னத்தம்பி-2க்கு தயாராகும் குஷ்பு, பிரபு.!

Prabha Praneetha
4 years ago
மீண்டும் சின்னத்தம்பி-2க்கு தயாராகும் குஷ்பு, பிரபு.!

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சின்னதம்பி. இதில் நடிகர் பிரபு மற்றும் குஷ்பூ இணைந்து நடித்துள்ளனர்.

மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்குமாறு இயக்குனர் அவர்களுக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உடல் எடையை அதிகரித்து இருந்த நடிகை குஷ்பு சில நாட்களாக தன்னுடைய எடையை குறைத்து 18 வயது பெண்ணை போல் உள்ளார். மாடர்ன் உடை அணிந்து இவர் வெளியிடும் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இது ஒருபுறமிருக்க நடிகர் பிரபு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர் ஒருவர் இருவருடைய புகைப்படத்தையும் ஷேர் செய்து இயக்குனர் பி.வாசு சின்னதம்பி 2 படத்தை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4