27.09.2021 இன்றைய ராசி பலன்

Prasu
2 years ago
27.09.2021 இன்றைய ராசி பலன்

மேஷம்:
அசுவினி: வியாபாரம் செய்வோருக்கு அதிகப் பணவரவு கிடைக்கும்.
பரணி: பணியாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். சுறுசுறுப்பு கூடும்.
கார்த்திகை 1: குடும்பத்தில் சிறு வாக்குவாதம் ஏற்படும். அதிர்ஷ்டம் வரும்.

ரிஷபம்: 
கார்த்திகை 2,3,4: எதிலும் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பீர்கள்.
ரோகிணி: கவனம் அதிகரிக்கும். எதிர்பாராத பாராட்டு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: மனதிற்குள் புதைந்திருந்த பிரச்னைகள் அனைத்தும் தீரும்.

மிதுனம் : 
மிருகசீரிடம் 3,4: மற்றவர்களுக்கு தகுந்த நேரத்தில் ஆலோசனை சொல்வீர்கள்.
திருவாதிரை: உங்களின் கடின உழைப்பை மற்றவர்கள் புரிந்துகொள்வர்.
புனர்பூசம் 1,2,3: மாலை வேளையில் நல்ல செய்திகள் கிடைக்கும்.

கடகம்: 
புனர்பூசம் 4: இடமாற்றத்திற்காக காத்திருப்பவர்களுக்கு தாமதமான நன்மை வரும்.
பூசம்: சிறிய இடர் ஏற்பட்டு விலகும். எதிரிகளைச் சமாளிப்பீர்கள்.
ஆயில்யம்: சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் வந்தால் தள்ளிப் போடுங்கள்.

சிம்மம்: 
மகம்: எதிரிகள் என்று நினைத்தவர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவர்.
பூரம்: குடும்ப விஷயங்களை அடுத்தவரிடம் பகிர வேண்டாம்.
உத்திரம் 1: நேர்மையான நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.

கன்னி: 
உத்திரம் 2,3,4: இயந்திரங்கள் பழுதாவதால் தொல்லை ஏற்படக்கூடும்.
அஸ்தம்: அவசரச் செய்கையால் இக்கட்டில் மாட்டாதபடி கவனம் தேவை.
சித்திரை 1,2: நினைத்ததை சாதிக்க முடியாமல் மனக்கவலை அடைவீர்கள்.

துலாம்: 
சித்திரை 3,4: இளைஞர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை.
சுவாதி: பிறர் பழிக்கும்படியான விஷயம் எதையும் செய்யாதிருங்கள்.
விசாகம் 1,2,3: நீதிக்குப் புறம்பான செயல் செய்வோருக்கு சிக்கல் வரக்கூடும்.

விருச்சிகம்: 
விசாகம் 4: ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சலிப்பு வேண்டாம்.
அனுஷம்: உடல்நலம் கடந்த ஓரிரு நாட்களை விட நன்றாக இருக்கும்.
கேட்டை: வெளிநாட்டுத் தொடர்பு ஏற்படும். பொருளாதாரம் முன்பைவிட சிறக்கும்.

தனுசு: 
மூலம்: மனு செய்திருந்த கடன் தொகை கைக்கு வந்து சேரும்.
பூராடம்: புது முயற்சியில் ஈடுபடுவது பற்றி மறுமுறை யோசிக்கலாம்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த விஷயத்தில் திடீர் திருப்பங்கள் உண்டு.

மகரம்: 
உத்திராடம் 2,3,4: அலங்காரத்தில் நாட்டம் ஏற்படுவதால் அழகு கூடும்.
திருவோணம்: பேச்சில் வசீகரம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.
அவிட்டம் 1,2: நீங்கள் பேசுவது பலிக்கும். குழந்தைகள் கவலை நீக்குவர்.

கும்பம்: 
அவிட்டம் 3,4: விலகிச் சென்றவர்கள் உதவி வேண்டி வலிய வருவார்கள்.
சதயம்: வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடும். உற்சாகம் குறையாது.
பூரட்டாதி 1,2,3: வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கிட்டும். பயம் நீங்கும்.

மீனம்: 
பூரட்டாதி 4: வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் உதவி செய்வார்கள்.
உத்திரட்டாதி: அலைச்சல், டென்ஷன் உண்டாகலாம். பரபரப்பான நாள்.
ரேவதி: சிறு சாதனை காரணமாக மகிழ்ச்சி வரும். வேலை அதிகமாக இருக்கும்.