இலங்கை அரசின் இரகசிய ஒப்பந்தம்! பகிரங்கப்படுத்தப்படுமா?

#SriLanka
Yuga
4 years ago
இலங்கை அரசின் இரகசிய ஒப்பந்தம்! பகிரங்கப்படுத்தப்படுமா?

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் நிலையத்தின் 40 சதவீத பங்கை நாடாளுமன்றத்திற்கு கூட தெரிவிக்காமல் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் குறித்து தலைமை பீடாதிபதிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்க்கட்சியின் தலைமைக்குழு, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட குழுவினர் இன்று தலைமை பீடாதிபதிகளை சந்திக்க உள்ளனர்.

தற்போதைய அரசாங்கம் முதலீடுகளை கொண்டு வருவதாகக் கூறி நாட்டின் மதிப்புமிக்க சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருவதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தபோதிலும் இத்தகைய உடன்படிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கத் தவறியது பாரதூரமான பிரச்சினை என அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4